மனித உடலில் தினமும் புதுபுது செல்கள் உற்பத்தி நடக்கிறது. இதில் சில நேரங்களில் ஏற்படும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோய் எனப்படுகிறது.
சாதாரண கட்டிகள் உடலில் ஒரு இடத்தில இருந்து அடுத்த இடத்திற்கு பரவாது. ஆனால் புற்றுநோய் கட்டிகள் இரத்தம் மற்றும் திசுக்கள் மூலம் பரவும் தன்மை கொண்டது.
புற்றுநோயின் ஏழு ஆபத்தான அறிகுறிகள்:
1. மார்பகம் (அ) உடலின் உறுப்புகளில் ஏற்படும் தடிப்பு (அ) வலியுள்ள (அ) வலியற்ற கட்டி.
2. வழக்கத்திற்கு மாறான இரத்தக் கசிவு (அ)இரத்தப் போக்கு.
3. நாள்பட்ட ஆறாத புண்.
4. உணவு செரியாமை (அ) உணவை விழுங்குவதில் ஏற்படும் சிரமம்.
5. மலம், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றம்.
6. குரலில் மாற்றம், தொடர் இருமல்.
7. மச்சத்தின் உருமாற்றம்.